களுத்துறை அளுத்கமவில் இன்று ரயில் விபத்து: அறுவர் அதிரடி பணிநீக்கம்!

train-accகளுத்துறை, அளுத்கம தொடருந்து நிலையத்தில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் ஏற்றிய தொடருந்து அளுத்கமவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனினும் கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துளது.

அதனால் காலியில் இருந்து பயணிக்கும் ரயில் ஹம்பாந்தோட்டை வரையும் கொழும்பில் இருந்து பயணிக்கும் ரயில் அளுத்கம வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் விபத்தை அடுத்து உடனடியாக விச்சாரணை மேற்கொணட விசாரணை மேற்கொண்ட மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.

அளுத்கம ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர், ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், ரயில் வழிகாட்டி மற்றும் உப வழிகாட்டி ஆகிய அறுவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: , , , ,

Leave a Reply