ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை நாளை ஆளும் கட்சி தீர்மானிக்கும் என சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களை ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.
நாளை வெள்ளக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசப்பட உள்ளது.
எதிர்காலத்தில் நடத்தப்பட உள்ள தேர்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடாத்துவதா என்பது குறித்தும் எப்போது நடாத்துவது என்பது குறித்தும் ஆராயப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
















