சீன அரசு தங்கள் நாட்டில் இணையதளம் மூலம் ஆபாச படங்கள் வெளிவருவதை முற்றிலும் தடை செய்யும் கொள்கையை உறுதியாக பின்பற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக “”Cleaning the Web 2014,” என்ற திட்டத்தை சீன அரசு தற்போது புதிதாக கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் படி ஆபாச இணையதளங்களை கண்டுபிடித்து கொடுப்பதற்காக வேலைக்கு ஆள் எடுக்கிறது. வருடத்திற்கு $32000 அந்த பணிக்கு ஊதியமாக கொடுக்க சீன அரசு கொடுக்க முன்வந்துள்ளது.
ஏற்கனவே சீனாவில் ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய 110 இணையதளங்களும், சுமார் 3300 சமூக இணையதளங்களும் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளன. இணையதளங்களில் ஆபாச படங்களை பதிவு செய்தால் ஜெயில் தண்டனை என்ற கடுமையான சட்டமும் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அங்கு ஜெயில் தண்டனையுடன் $40000 வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
டுவிட்டர் போன்று சீனாவில் செயல்படும் Sina Corp என்ற நிறுவனத்திற்கு கடந்த வாரம் சீன அரசு $815,038 அபராதம் விதித்தது. Sina Corp இணையதளத்தில் ஆபாச படங்களும் கட்டுரைகளும் பதிவு செய்ததால் இந்த அதிரடி நடவடிக்கை என கூறப்பட்டது.
ஆபாச இணையதளத்திற்கு எதிரான போர் தொடரும் என்றும் சீனாவில் ஆபாச இணையதளங்கள் காலூன்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சீன அரசு உறுதியாக கூறியுள்ளது.
















