காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ‘நான்சென்ஸ்’ விமர்சனத்தின் போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மன்மோகன்சிங்கை அவரது மகள் வலியுறுத்தியதாக சஞ்சய் பாரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் உதவி செயலராக இருந்தவர் சஞ்சய் பாரு. தனது பணிக் காலத்தில் மன்மோகன்சிங் அலுவலகத்தில் நடந்த விஷயங்களை புத்தகமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் பாரு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் பல முறை பதவியை ராஜினாமா செய்யுமாறு மன்மோகன் சிங் வலியுறுத்தப்பட்டார்.
குற்றவாளிகள் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்ற மசோதா அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ‘நான்சென்ஸ்’ என விமர்சித்தார்; அப்போது மன்மோகன் சிங்கின் மகள், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விடுமாறு தந்தையை வலியுறுத்தினார் என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இது என்ன சர்ச்சையை உருவாக்குமோ?
















