நாட்டில் எந்தவொரு வடிவத்திலான அமைதியின்மைக்கும் நான் இடமளிக்கமாட்டேன். இங்கு மதங்கள் அடிப்படையிலான வன்முறைகள் ஒருபோதும் இருந்ததில்லை. சில சம்பவங்கள் இருந்திருக்கலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எனக்கு பேஸ்புக்கில் 3 இலட்சம் விருப்புக்களும் டுவிட்டரில் 25 ஆயிரம் பின்பற்றுனர்களும் உள்ள நிலையில் நான் ஏன் அவற்றை தடை செய்யவேண்டும்? எவ்வாறு என்னால் அது முடியும்,? இவற்றை நான் தடை செய்தால் வீட்டில் மகன்களிடமிருந்தே புரட்சி வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு கிழக்கு இளைஞர்களின் அனைத்து உரிமைகளையும் பயங்கரவாதம் பறித்துவிட்டது. அந்த உரிமைகளை நாம் மீண்டும் பெற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
உதாரணமாக 2013 ஆம் ஆண்டின் சிறந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு வடக்கில் இருந்தே வந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்திய டுவிட்டர் வழியான நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் மத அமைதியின்மையை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பதிவு செய்யப்பட்டிருந்த டுவிட்டர் பதிவுக்கே ஜனாதிபதி இந்த பதிலை வழங்கியிருந்தார்.
பல்வேறு கேள்விகள் உலகளாவிய மட்டத்திலிருந்து இந்த டுவிட்டர் நேர்காணலுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க டுவிட்டர் நேர்காணலை ஒருங்கிணைத்தார்.
டுவிட்டர் நேல்காணலின் ஊடாக ஜனாதிபதி அளித்த பதில்கள் வருமாறு
கேள்வி: உலகத்திலிருந்து இலங்கையை இளைஞர் விவகாரத்தில் எது வித்தியாசப்படுத்துகின்றது? எவ்வகையான முன்னேற்றம் இன்னும் தேவை என்று கருதுகின்றீர்கள்?
பதில்: சமாதானத்தில் இளைஞர்களே முக்கியமானவர்கள். அவர்களுக்கு இலவசக் கல்வியும் முன்னேற்றத்துக்கான வழியும் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: மேலைத்தேய நாடுகள் எவ்வாறு அர்ப்பணிப்புடன் எதிர்கால இளைஞர் விவகார பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று நீங்களும் உங்கள் சகாக்களும் நம்புகின்றீர்கள்?
பதில்: நாங்கள் எவருக்கும் திறக்கப்பட்டே உள்ளோம். அதற்கான சிறந்த சான்றாக இந்த மாநாட்டை குறிப்பிடலாம்.
கேள்வி: விசேட தேவையுள்ளோர் எப்போது இளைஞர் செயற்பாடுகளின் பிரதான நிகழ்சசி நிரலுக்கு வருவார்கள்? ஏன் அவர்கள் எப்போதும் புறந்தள்ளப்டுகின்றனர்?
பதில்: மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பில் எம்மிடம் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. நாம் அந்தக் கொள்கையில் கடுமையாக இருக்கின்றோம். அண்மையில் மாற்றுத்திறனாளிகள் ஆறுபேரை மத்திய வங்கி ஆட்சேர்ப்பு செய்துள்ளது.
கேள்வி :வேலையின்மையை அதிகரிக்கக்ககூடிய இளைஞர்களின் குறைபாடுகள் என்ன என்று கருதுகின்றீர்கள்? விசேடமாக இலங்கையை பொறுத்தவரை?
பதில்: தொழில் சந்தைக்கு தேவைப்படுகின்ற திறமை முன்வைக்கப்படுவதை நாம் காணவில்லை. சில தவறான எண்ணங்கள் காரணமாக சந்தையில் காணப்படுகின்ற தொழிலுக்கு இளைஞர்கள் அக்கறை செலுத்தவில்லை என்பது தெரிகின்றது.
கேள்வி :வடக்கு கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் விசேட தேவையை நிறைவேற்ற உங்கள் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ள விடயங்கள் என்ன?
பதில்: இந்த இளைஞர்களின் அனைத்து உரிமைகளையும் பயங்கரவாதம் வௌியே எடுத்துவிட்டது. ஆந்த உரிமைகளை நாம் மீண்டும் பெற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். உதாரணமாக 2013 ஆம்ஆண்டின் சிறந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு வடக்கில் இருந்தே வந்தது. இது எமது வேலைத்திட்டத்தின் பிரதிபலனாகும்.
மேலும் தெற்கில் இருக்கின்ற பாடசாலைகளில் வழங்கப்படுகின்ற அனைத்து வசதிகளும் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கும் வழங்கப்படுகின்றது. விசேடமாக தகவல் தொழில் நுட்ப துறையில் இது செய்யப்படுகினறது.
கேள்வி: தீர்மானம் எடுப்பதில் இளைஞர்களை பங்கெடுக்கவைப்பதற்கு உங்கள் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
பதில்: இளைஞர் பாராளுமன்றம் அதில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் எனது வரவு செலவுத்திட்டத்திலும் நான் இளைஞர்களையும் பெண்களையும் கலந்தாலோசிப்பேன்.
பெண்கள் முன்வைக்கின்ற அதிகமரான யோசனைகள் வரவு செலவுத்திட்டததில் உள்ளடக்கப்படுகின்றன. எனது அரசாங்கத்தில் மிக அதிகமான இளம் எம்.பி. க்கள் உள்ளனர். ஏனைய அரசியல் அமைப்புக்களிலும் உள்ளனர்.
கேள்வி :சட்டக்கல்லூரியின் வயது தடையானது இறுதி பரீட்சைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தீர்ப்பதற்கு?
பதில்: அதனை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். வுிரைவில் இதற்கு தீர்வு ஒன்றை வழங்குவதற்கு எதி்ர்பார்கின்றோம்.
கேள்வி: குறைந்த செலவில் கல்வி பெற்றுக்கொள்வது அடுத்த முக்கிய விடயமாகும். இலங்கையில்?
பதில் :எமது கல்வித்திட்டத்தை நாம் பாரியளவில் முன்னேற்றிவருகின்றோம். நாட்டில் சிறந்த 1000 பாடசாலைகளுக்கு சிறந்த வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி: பல்கலைகழக மாணவர்கள் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2500 ரூபாவையே பெறுகின்றனர். ஏதாவது அதிகரிப்பை எதிரபார்க்கலாமா?
பதில் :ஆம். நூம் தீவிரமாக இந்த விடயத்தை கருத்திற்கொண்டுள்ளோம்.
கேள்வி: 10 வீதமான மாணவர்கள் உதவிகளை பெறுவதற்கு அதிகம் தகுதியானவர்கள் என கணிப்பீடுகள் கூறுகின்றன. இந்த மாணவர்கள் கணிசமான அதிகரிப்பை பெறுவார்கள்.
கேள்வி: பேஸ்புக் மற்றும் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை தடைசெய்யும் நோககம் உள்ளதா?
பதில் :எனக்கு பேஸ்புக்கில் 3 இலட்சம் விருப்புக்களும் டுவிட்டரில் 25 ஆயிரம் பின்பற்றுனர்களும் உள்ள நிலையில் நான் ஏன் அவற்றை தடை செய்யவேண்டும்? ஏவ்வாறு என்னால் அது முடியும்,? இவற்றை நான் தடை செய்தால் வீட்டில் மகன்களிடமிருந்தே புரட்சி வந்துவிடும்.
கேள்வி :இந்த ஆசிர்வதிக்கப்பட்ட நாட்டில் மத அமைதியின்மையை மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுங்கள்.
பதில் :எந்தவொரு வடிவத்திலான அமைதியின்மைக்கு நான் இடமளிக்கமாட்டேன். இங்கு மதங்கள் அடிப்படையிலான வன்முறைகள் ஒருபொதும் இருந்தததில்லை. சில சம்பவங்கள் இருந்திருக்கலாம்.
















