லண்டனில் கன்ஸவேட்டி வேட்பாளராக ஈழத் தமிழர் திரு. கனகசபாபதி குககுமரன் போட்டியிடுகின்றார்.

ganagasapapathi-gugakumaranபிரிட்டிஸில் எதிர் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் “WEST HARROW COUNCIL Ward in Harrow” தேர்தலில் கன்சர்வேடிவ் வேட்பாளராக ஈழத் தமிழர் திரு. கனகசபாபதி குககுமரன் போட்டியிடுகின்றார்.

இது தமிழ் மக்களிடையே பெருத்த வரவேற்பினையும், உலக தமிழர்கள் மத்தியில் ஒரு பெரிய நேர்மறையான உணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குகள் ஒரு இலங்கை கன்சர்வேடிவ் கட்சி சார்பான வேட்பாளரை ஆதரிக்குமென நம்பப்படுகின்றது.

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் அவர்கள் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருக்கையில், யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த அவர், உலக ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்கள் சார்பாக, அவர்களின் நலன் கருதி இலங்கை தமிழர்கள் இன அழிப்பு தொடர்பான வன்முறைகளை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply