100 மீட்டர் ஓட்டத்தில் புதிய உலக சாதனை ஏற்படுத்திய 104 வயது முதியவர்

race-man104 வயது முதியவர் ஒருவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 32.79 வினாடிகளில் ஓடிமுடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஐரோப்பா நாடுகளின் மிக முதிய வயதினை உடையவர் என்ற பெயர் பெற்றுள்ள Stanisław Kowalski, என்பவருக்கு தற்போது 104 வயது ஆகிறது. இந்த வயதில் அவர் 100 மீட்டர் தூரத்தை வெறும் 32.79 வினாடிகளில் ஓடி முடித்து உலக சாதனை செய்துள்ளார். போலந்து நாட்டை சேர்ந்த இவர் இதற்கு முன்னர் 96 வயதை சேர்ந்த ஒருவர் 34 வினாடிகளில் ஓடி முடித்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை புரிந்துள்ளார்.

இவர் தன்னுடைய ஆரோக்கியமான உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, தான் கல்வி கற்ற காலத்தில் இருந்தே தினமும் 10 கிமீ தொலைவுக்கு தினமும் சைக்கிள் மற்றும் நடந்து சென்று பழக்கம் உடையவராக இருந்ததால் தன்னால் இன்றுவரை ஆரோக்கியமாக இருக்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயணம், மற்றும் உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: , ,

Leave a Reply