இரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை. ஆஸ்திரேலிய மருத்துவமனையில் பிறந்தது.

australia-babyஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெண்ணுக்கு இரண்டு தலையுடன் கூடிய அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை ஆரோக்கியமாகவும், இரண்டு மூளை மற்றும் நான்கு கண்களுடன் இருக்கின்றது. இந்த அதிசய குழந்தைகளை காண பொதுமக்கள் அதிக ஆவலுடன் அவருடைய வீட்டிற்கு வந்து செல்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை Renee Young என்ற பெண்ணுக்கு பிரசவ வலி வந்ததால், அவர் சிட்னி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பிறந்த குழந்தையை பார்த்தவுடன் மருத்துவர்களும், நர்ஸ்களும் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு தலையுடனும் ஒரே உடலையும் கொண்டுள்ள அந்த பெண் குழந்தைஆரோக்கியமாக இருப்பதாகவும், இரண்டு தலையிலும் இரண்டு மூளைகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த குழந்தை இரட்டைக்குழந்தையாக உருவாகி பின்னர் diprosopus என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இதுபோன்ற நிலையை அடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இரண்டு குழந்தைகளும் தங்களுக்குரிய மூக்கின் மூலம் பிரச்சனையின்றி சுவாசம் செய்வதாகவும், கூறிய மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பரிந்துரை செய்தனர். அவர்களின் ஆலோசனையின்படி தற்போது Children’s Hospital at Westmead என்ற மருத்துவமனையில் தற்போது இந்த குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

Tags: , ,

Leave a Reply