சீனாவில் இளம்பெண் ஒருவர் 11வது மாடியில் உள்ள ஏசி பெட்டியின் மேல் நின்று போதையில் நடனம் ஆடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் தெற்குபகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று ஒரு பெண் ஒரு ஆணுடன் வந்து வாடகைக்கு அறை எடுத்தார். அவருக்கு 11 வது மாடியில் அறை ஒதுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த பெண் நிர்வாணமாக ஓட்டல் அறையின் ஜன்னலை திறந்து அதன்மூலம் வெளியே வந்து அங்கு வைக்கபப்ட்டிருந்த ஏ.சி. பெட்டியின் மீது ஏறி நின்றார். இதனை கீழே இருந்து பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.
முதலில் அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வதாக நினைத்தனர். ஆனால் அந்த பெண் பயங்கர போதையில் இருந்ததால், அவர் ஏசி பெட்டியின் மேல் நின்று நடனம் ஆடினார். உடனடியா மீட்புக்குழுவினர்களுக்கு தகவல் தரப்பட்டது.
மீட்புக்குழுவினர் அவர் அணிந்து கொள்வதற்காக ஒரு டவலை அவரிடம் கொடுத்தனர். அதை வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் நடனம் ஆடினார். மீட்புக்குழுவினர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை. பின்னர் அந்த ஓட்டலில் பணிபுரியும் சீனியர் வெயிட்டர் ஒருவர் மூலம் அவருக்கு தேவையான உணவுகளை பரிமாறுவதாக சொன்னவுடன் அவர் கீழே இறங்க ஒப்புக்கொண்டார்.
மீட்புக்குழுவினர்களின் உதவியால் அவர் ஜாக்கிரதையாக ஓட்டல் அறைக்கு எடுத்துசெல்லப்பட்டார். அவருடைய அறையில் அதிகமான அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவருடன் ஓட்டலுக்கு வந்திருந்த ஆண், தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.
போதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த பெண்ணை Shi Wan அவர்கள் தலைமையிலான போலீஸ் அதிகார்கள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
















