விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியாவின் படுகொலை திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது.
இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் கொடூரமாக படுகொலை செய்தனர். அவரது வாழ்க்கை கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் படமாகிறது.
இதில் இசைப்பிரியா வேடத்தில் பிரியா நடிக்கிறார். நாயகனாக பாலாஜி நடிக்கிறார். பிரபாகரன், சுமந்தனி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி கு.கணேசன் இயக்குகிறார்.
இசைப்பிரியாவின் வாழ்க்கை கதை நெஞ்சை உருக்கும் சம்பவங்களுடன் படமாகிறது என்றும் இப்படத்துக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















