கிளாலி பகுதியில் ரோந்து சென்றிருந்த படைச்சிப்பாய் கண்டல் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

dead-body-LK_armyகிளாலி பகுதியில் ரோந்து சென்றிருந்த படைச்சிப்பாய் ஒருவர் அங்குள்ள கண்டல் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தகவல் ஒன்றின் அடிப்படையினில் கொடிகாமம் பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகமாலை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவச்சிப்பாய் நேற்று கடமைக்குச்சென்றபோது காணாமல் போயிருந்தார் எனவும் அவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.எனினும் மரணத்திற்கு காரணம் கண்டறியப்படவில்லை.

தம்முடன் ரோந்து வந்திருந்த குறித்த படைச்சிப்பாய் காணாமல் போயிருந்தமை தொடர்பினில் சக சிப்பாய்களினால் படைமுகாம் பொறுப்பதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.அதையடுத்து இரவோடிரவாக தேடுதல் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.அவ்வேளையிலேயே குறித்த சிப்பாய் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

Tags: ,

Leave a Reply