புலிகளை நினைவுகூர்ந்த ததேகூ மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஜேஎன்பி வலியுறுத்தல்

vimal veerawansaபுலி பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த 18ம் திகதி மன்னார், முள்ளிவாய்கால், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாக முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இதில் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் உள்ளிட்ட வட மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் யாப்பை மீறி பிரிவினைவாதத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவதுடன் இரகசிய ஆயுத குழு செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply