எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உகாண்டா நர்ஸ் ஒருவர், தனக்கு பாதித்த நோயை பலருக்கு பரப்ப முயன்றாதாக கைது செய்யப்பட்டார்.
உகாண்டாவை நாட்டை சேர்ந்த Rosemary Namubiru, என்ற 64 வயது பெண், கடந்த சில ஆண்டுகளால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் 2 வயது குழந்தை ஒன்றுக்கு ஊசி போடுவதற்கு முன் அந்த ஊசியை தனது கையில் குத்திவிட்டு, பின்னர் குழந்தைக்கு போட்டுள்ளார்.
இதனை தூரத்தில் இருந்த பார்த்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் காவல்துறையினர்களிடம் அளித்த புகாரின் பேரில் Rosemary Namubiru, அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
ஒரு தவறும் செய்யாத அப்பாவியான தனக்கு யாரோ ஒருவர் எய்ட்ஸ் நோயை பரப்பிவிட்டதாகவும், அதற்கு பழிவாங்கவே பலருக்கு எய்ட்ஸ் நோயை பரப்ப முயன்றதாகவும், அவர்போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். அவரால் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் Rosemary Namubiru,க்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
















