மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாடல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

arrestமட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் கைதான சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது கையடக்க தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாடல்களையும், படங்களையும் வைத்திருந்ததை அடுத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் இந்த சந்தேகநபர் கடந்த 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply