அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய குற்றவாளி ஒருவருக்கு 25 வருட ஜெயில் தண்டனை கொடுத்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வந்த கடிதம் ஒன்றி ரிஷின் என்ற விஷம் தடவிய கடிதம் ஒன்று வந்ததை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் 46 வயது James Everett Dutschke என்பவரை கைது செய்தனர்.
James Everett Dutschke மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. பின்னர் அவர் குற்றம் செய்ததை கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்த அமெரிக்க நீதிமன்றம் என்ன தண்டனை கொடுப்பது என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று James Everett Dutschke என்பவருக்கு 25 வருட ஜெயில் தண்டனை கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு அமெரிக்காவை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக Shannon Guess Richardson என்ற 35 வயது பெண், ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதற்காக 15 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















