கிளி. திருவையாற்றில் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் இளைஞன் திடீர் கைது. அச்சத்தில் மக்கள்!

arrestதெரிந்தும் தெரியாமலும் வடக்கில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி திருவையாறு, அம்பாள் நகரைச் சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது இளைஞன் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

1994ம் ஆண்டு பிறந்த இவர் வன்னியில் போர்க்காலத்தில் சிறிய பள்ளி மாணவனாகவே இருந்துள்ளார்.

இவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என உறுதிபட தெரிவிக்கப்படுகின்றது.

நைற்றா எனப்படும் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற இவர், பின்பு அசோக் லேலண்ட கம்பினியில் படித்துக் கொண்டிருந்த நிலையில், தனது தாயின் பிறந்த நாளுக்காக வீட்டுக்கு வந்தபொழுது ரி.ஜ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வயது வேறுபாடின்றி பயங்கரவாத தடுப்புப் பிரிவால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கைதுகளால், தமிழர் வாழும் பகுதிகள் அச்சமும் நிம்மதி இழந்த நிலையுடனும் காணப்படுகின்றது.

இது தொடர்பாக அதிகாரிகள் சரியான முடிவுகளை எடுக்கவேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags: , ,

Leave a Reply