பத்தாம் வகுப்பு பொது தேர்வை காலால் எழுதி சாதனை படைத்த மாற்றுத்திறன் மாணவர் மகேஷ் 282 மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நேரு நினைவு சம்பூரணி அம்மாள் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் மகேஷ்.
பிறவியிலேயே இரண்டு கைகளை இழந்தவர். தளராத மன உறுதியுடன் படித்த இவர் தனது கால்களையே கைகளாக கொண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதினார். இவர் தற்போது தமிழில் 53, ஆங்கிலத்தில் 51, அறிவியலில் 70, சமூக அறிவியலில் 70, கணிதத்தில் 52 என மதிப்பெண்களை பெற்றுள்ளார். தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர் கொண்ட இவர், 282 மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளார்.
















