ஈரான் நீதிமன்றத்தில் ஆஜராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மறுப்பு.

mark-zuckerberg-facebookதனிப்பட்ட தங்களது வாழ்க்கை ரகசியங்களை தங்களுடைய அனுமதியில்லாமல் மற்றவர்களுக்கு பகிரப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு ஃபேஸ்புக் நிறுவனர் மீது ஈரான் ஃபேஸ்புக் பயனாளிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ஒட்டி ஈரான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜகர்பெர்க் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஈரானில் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய சமூக இணையதளங்கள் மூலம் தங்களது ரகசியங்கள், தனிப்பட்ட செயல்பாடுகளில் மற்றவர்கள் தலையிடுவது அதிகரிப்பதாக ஏராளமானோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானில் உள்ள பார்ஸ் மாகாணத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் மார்க் ஆஜராக மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே குற்றவாளிகளை பகிருந்துகொள்ளும் ஒப்பந்தம் எதுவும் இல்லை என்பதாலும், ஃபேஸ்புக் குறித்த எந்த வழக்கும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாலும், மார்க் இந்த வழக்கில் ஆஜராக மாட்டார் என்று கூறப்படுகிறது.

தற்போது ஈரான் நாட்டில் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய இணையதளங்களை முடக்கி வைக்க ஈரான் அரசு அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply