இந்தியாவின் 15வது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கைக்குறிப்பு.

narendra-modiசிறுவயதில் டீக்கடையில் வேலை செய்த சாதாரண மனிதராக வாழ்க்கையை துவக்கிய நரேந்திரமோடி தனது அயராக உழைப்பாலும், திறமையாலும், தற்போது பாரதத்தின் பிரதமராக பதவியேற்றுள்ளார். உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில் அவருடைய வாழ்க்கை குறிப்பை கொஞ்சம் அலசுவோம்.

நரேந்திர மோடி : இந்தியப் பிரதமர் | மே 26, 2014

இயற்பெயர்: நரேந்திர தாமோதர்தாஸ் மோடி

பிறந்த தேதி, இடம்: 17 செப்டம்பர் 1950 (வயது 63), வட்நகர், மேஷனா மாவட்டம், குஜராத்

கல்வி: அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம், குஜராத் பல்கலைக்கழகம்.

மனைவி: யசோதாபென் (1968-ல் திருமணம்)

• பிற்படுத்தப்பட்ட சமூகம் (ஓ.பி.சி.) நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்

• தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி, ஹிராபென் தம்பதியருக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தார்.

• சிறுவயதில் தனது சகோதரருடன் இணைந்து டீ கடை நடத்தினார்

• சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து தனது கல்லூரி பருவத்தில் அந்த அமைப்பின் முழுநேர பிரச்சாரகராகப் பணியாற்றினார்.

குஜராத் முதல்வர் பதவி

07 அக். 2001 முதல் 22 டிச. 2002 வரை

22 டிச. 2002 முதல் 22 டிச. 2007 வரை

23 டிச. 2007 முதல் 20 டிச. 2012 வரை

20 டிச. 2012 முதல் 22 மே 2014 வரை

17 செப்டம்பர் 2011- 2012 தொடக்கம் வரை: சத்பாவனா இயக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முறை உண்ணாவிரதம் இருந்தார்.

செப்டம்பர் 2013: கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு

மே 16, 2014: மக்களவைத் தேர்தலில் மோடியின் தலைமையில் போட்டியிட பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது.

வெளிநாட்டுப் பயணங்கள்:

சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

1995: ஐந்து மாநில பொறுப்புடன் பாஜக தேசிய செயலாளராக நியமனம்

1998: தேசியச் செயலாளராக பதவி உயர்வு. 2001-ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகித்தார்.

2002: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோடி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.

Tags: , ,

Leave a Reply