தென்கொரியாவில் முதியோர் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தென்கொரியாவில் Jangseong, என்ற இடத்தில் உள்ள முதியோர் மருத்துவமனையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவந்த 20 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது பரிதாபத்திற்குரியது.
இந்த தீவிபத்து தொடர்பாக 81 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் மருத்துவமனைக்கு தீவைத்தார் என்பது அங்கிருந்த கேமராவில் பதிவான வீடியோவில் இருந்து தெரிய வந்துள்ளது. அவர் எதற்காக தீவைத்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் இருந்த 35 நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோர் காயமின்றி மீட்கபட்டனர். மீட்கப்பட்ட நோயாளிகள் அனைவரையும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
















