பக்கத்து வீட்டு துப்பாக்கியால் தம்பியை சுட்டுக் கொன்ற 3 வயது சிறுவன்… அமெ.வில் சோகம்

boy-gunஅமெரிக்காவில் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுட்டதில் பரிதாபமாக அவனது ஒன்றரை வயது தம்பி பலியானான்.

அமெரிக்காவின்அரிசோனா மாகாணத்தில் உள்ள பேசன் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று மற்றும் ஒன்றரை வயது மகன்களுடன் அருகிலிருந்த தனது தோழியைப் பார்க்கச் சென்றுள்ளார். தோழிகள் இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்க சிறுவர்கள் பக்கத்தில் இருந்த அறையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு துப்பாக்கி இருப்பதைக் கண்ட மூன்று வயது சிறுவன் அதனை எடுத்து தனது தம்பியைச் சுடுவது போல பாசாங்கு காட்டியுள்ளான்.

ஆனால், துப்பாக்கி சரியாக லாக் செய்யப் படாததால் எதிர்பாராத விதமாக ஒன்றரை வயது சிறுவன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply