இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆறு வயது சிறுமி ஒருவர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த 18 மாத நாய்க்குட்டி ஒன்றை தொலைத்துவிட்டார். அதனால் அவர் அந்த நாய்க்குட்டியை கண்டுபிடித்து தருமாறு ஃபேஸ்புக்கில் நாய்க்குட்டியின் புகைப்படத்துடன் பதிவு செய்தார். அவருடைய பதிவு 25000 பேர்களால் பகிரப்பட்டு 24 மணிநேரத்தில் தொலைந்த அவருடைய நாய்க்குட்டி கிடைத்துவிட்டது.
இங்கிலாந்து நாட்டின் Pontcanna, Cardiff. என்ற பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி Lola Wilson. இவர் 18 மாத Ruby என்ற நாய்க்குட்டியை மிகவும் ஆசையாக வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அந்த தெருவில் சுற்றிக்கொண்டிருந்த Rubyயை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டு சென்றதாக கூறப்பட்டது. இதனால் மிகவும் கவலை அடைந்த Lola Wilson, தனது தாயாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் நாயுடைய புகைப்படத்தை இணைத்து, தனது செல்ல நாய்க்குட்டியை கண்டுபிடித்து தருமாறு உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.
அவர் பதிவு செய்த ஸ்டேட்டஸ் அடுத்த சிலமணி நேரங்களில் அந்த பகுதியில் உள்ள சுமார் 25000 ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு ஷேர் செய்யப்பட்டது. இந்நிலையில் Lola Wilson அவர்களுடைய தாயாருக்கு இன்று காலை ஒரு போன்கால் வந்தது. தொலைந்த நாய்க்குட்டியை ஒருவர் தன்னிடம் விற்றுள்ளதாகவும் உடனடியாக வந்தால் நாய்க்குட்டியை திரும்ப ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த Lola Wilson, தனது தாயாருடன் சென்று தனது செல்ல நாய்க்குட்டியை மீட்டுவந்தார். தனது நாய்க்குட்டி தொலைந்த 24 மணிநேரத்தில் கண்டுபிடிக்க உதவிய ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு Lola Wilson தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
















