பிரியங்கா சோப்ராவின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடும் முன்னாள் பாய்பிரண்ட். அதிர்ச்சியில் பாலிவுட்

priyanka-chopraநடிகை பிரியங்கா சோப்ரா, தனது முன்னாள் காதலன் தயாரித்து வரும் 67 Days என்ற திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, அந்த காலகட்டத்தில் Prakash Jaju என்பவருடன் டேட்டிங் சென்றுகொண்டிருந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றிருந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்ததால், அவர் தனது பாய்பிரண்டை கழட்டிவிட்டுவிட்டு சினிமாவில் கவனம் செய்தார்.

அதுமட்டுமின்றி அடிக்கடி தன்னை தொந்தரவு செய்வதாக Prakash Jaju மீது போலீஸில் புகார் அளித்தார். அவருடைய புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 67 நாட்கள் சிறையில் இருந்த Prakash Jaju, அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். தான் 67 நாட்கள் சிறையில் இருந்ததை குறிப்பதற்காகவே தன்னுடைய படத்திற்கு 67 Days என்று தலைப்பு வைத்ததாகவும், பிரியங்கா சோப்ராவிற்கு தனக்கும் ஏற்பட்ட அந்தரங்க உறவுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக இந்த படத்தை தயாரிப்பதாகவும், அவர் கூறிவந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா சோப்ரா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் தயாரிக்கும், Prakash Jaju, தன்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை என்றும், அதனால் உடனடியாக தனது படத்தை கைவிடாவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பிரியங்காவின் எச்சரிக்கையை மீறி Prakash Jaju, தொடர்ந்து படத்தை எடுத்து வருவதால், நேற்று மும்பை நீதிமன்றத்தில் பிரியங்காவின் வழக்கறிஞர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply