சாராயம் அருந்தியபடி நடமாடிய இளைஞர்கள்… : வல்லிபுரம் வலிக்கண்டியில் சவுக்குத் தோப்புக்கு நடந்தது என்ன ?

tree-fire2(02.06.2014) பகல் 11 மணியளவில் வல்லிபுரம் வலிக்கண்டிப் பகுதியில் உள்ள, சவுக்கம் காடு விசமிகளால் தீ வைக்கப்பட்டது. சாராயம் அருந்தியபடி அங்கே நடமாடிய சில இளைஞர்கள் தான் இங்கே தீ மூட்டியதாக அங்கே நின்றிருந்த பிறர் தெரிவித்துள்ளார்கள்.

இவர்கள் சிங்கள இளைஞர்களா ? இல்லை தமிழ் இளைஞர்களா என்பது தெரியவில்லை. ஆனால் சமீபகாலமாக யாழில் இதுபோன்ற அடாவடிச் செயல்கள் அதிகரித்துச் செல்கிறது. மாணவர்களுக்கு மத்தியில் போதைப்பொருட்கள் தாராளமாகப் பிளங்குவதும், அவர்கள் படு சகஜமாக தண்ணியடிப்பதும் சர்வசாதாரணமாக நடந்தேறி வருகிறது.

இவர்கள் இவ்வாறு சீரழிந்துபோக, வெளிநாட்டில் உள்ள அவர்களது உறவினர்களே காரணம் என்று யாழில் பரவலாகப் பேசப்படுகிறது. சிலர் வெளிநாடுகளில் தாம் உழைக்கும் காசை பார்த்துப் பாராமல் தமது உறவுகளுக்கு அனுப்பி வருவதாகவும், அவர்களும் இம்மை வறுமை தெரியாமல் அக் காசை தமது இளம் பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்களை கெடுத்துவருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது

Tags: , ,

Leave a Reply