நவநீதம்பிள்ளைக்குப் பின் அவரது இடத்திற்கு யார்? இழு பறி நிலையில் நியமனம்..

navanethem-pillay2ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படவுள்ளார் என்பது குறித்து கேள்வி எழுப்பி ஆங்கிலப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடையவுள்ளது.

ஆனால் அவரது பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்று இன்னமும் எந்தப் பதிலையும் வழங்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை ஐ.நா பொதுச்செயலர் மேற்கொண்டுள்ளார்.

தற்போது, மேற்காபிரிக்க நாடான கினியா பிசாவுவில் ஐ.நா தூதுவராக பணியாற்றும், கிழக்கு திமோரைச் சேர்ந்த, ஜோஸ் ராமோஸ் ஹோர்டா நியமிக்கப்படவுள்ளாரா என்று ஐ.நாவிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்ப்பியிருந்தது.

அதற்கு ஐ.நா தரப்பில்,ஒரு மாதமாகின்ற நிலையிலும் பதிலளிக்கப்படவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் தலைவராகச் செயற்பட்ட மர்சுகி தருஸ்மன் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டவர்களும் போட்டியில் உள்ளனர் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, ஜோஸ் ராமோஸ் ஹோர்டா, மர்சுகி தருஸ்மன் ஆகியோரே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: , ,

Leave a Reply