ஓவியர் வே.ஹோகுலரமணனின் முதலாவது கூத்து எனும் தனி ஓவியக் கண்காட்சி

kokulramananகிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் தற்காலிக விரிவுரையாளரும், ஓவியருமான வே.ஹோகுலரமணனின் முதலாவது கூத்து எனும் தனி ஓவியக் கண்காட்சியின் முதலாவது நாள் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி. கிட்ணம் கோவிந்தராஜா, கௌரவ விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், சிறப்பு விருந்தினராக பேராசிரியர் சி. மௌனகுரு உட்பட பார்வையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் போது கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி. கிட்ணம் கோவிந்தராஜா, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் நாடாவை வெட்டி இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

இக்கண்காட்சியானது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் நடைபெறும் எனவும், இதனை பார்வையிடுவதற்கு அனைவரும் வருகை தந்து இக்கண்காட்சியை பார்வையிடுமாறு கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் தற்காலிக விரிவுரையாளரும், ஓவியருமான வே.ஹோகுலரமணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓவியர் வே.ஹோகுலரமணனின் தனி முயற்சியில் இக் கண்காட்சி நடைபெற்றது. இவர் இதற்கு முதல் பல ஓவியக் கண்காட்சிகளை லண்டன், கொழும்பு, மட்டக்களப்பு போன்ற இடங்களில் பல ஓவியர்களுடன் இணைந்து நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

Tags: ,

Leave a Reply