சட்ட அனுமதி கிடைக்குமானால் இன்னும் இரு வருட காலத்தில் 3 பேரை பயன்படுத்தி குழந்தைகளை விருத்தி செய்யும் செயற்கிரமத்தை முன்னெடுக்க விஞ்ஞானிகள் தயார் நிலையில் இருப்பார்கள் என பிரித்தானிய இனவிருத்தி ஒழுங்கமைப்பொன்றைச் சேர்ந்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இரு பெண்களிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டைகளையும் ஆணொருவரின் விந்தணுவையும் பயன்படுத்தி குழந்தையொன்றை விருத்தி செய்வதே இந்த தொழில்நுட்பம்.
தாயிடமிருந்து அபாயகரமான பிள்ளைகளுக்கு கடத்தப்படும் இழைமணி தொடர்பான நோய் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படுவதை தடுக்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த செயன்முறை பாதுகாப்பதற்காக அமையக்கூடும் என்பதற்கான சான்று எதுவும் இல்லை என்ற போது இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்தது.
முன்னேற்றகரமான செயற்கை கருக்கட்டல் செயன்முறைகளைப் பயன்படுத்தி இந்த மூன்று பேரை உள்ளடக்கிய கருக்கட்டலை மேற்கொள்வதன் மூலம் இழைமணி தொடர்பான நோய்கள் தாயிடமிருந்து பிள்ளைக்கு கடத்தப்படுவதை தடுக்க முடியம் என மனித இனவிருத்தி மற்றும் மூலவுயிர் அதிகாரசபையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கூறுகின்றது.
















