30 ஆண்டுகளில் 100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மாஸ்கோ கொடூரன்….

rapist-arrest-moscowரஷ்யாவில் உள்ள 67 வயது நபர் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து கடந்த 30 வருடங்களில் கொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்ட வந்தவர் கைது செய்யப்பட்டார். இவர் இதுவரை சுமார் 100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் Valery Makarenkov என்ற 67 வயது நபர் ஒருவர் நேற்று காலை மாஸ்கோவில் உள்ள பூங்கா ஒன்றில் 29 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது பிடிபட்டார். அவர் முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை நீக்கி, அவருடைய அடையாளத்தை உலகிற்கு தெரிய வைத்து காவல்துறையினர்களிடம் அந்த பெண் ஒப்படைத்தார்.

Valery Makarenkov, இதுவரை பல கொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டு வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பெண்களை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதால், இவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க மாஸ்கோ காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Valery Makarenkov என்ற கொடூரமான நபருக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று ரஷ்யாவில் உள்ள பெண்கள் அமைப்புகள் நீதிமன்றத்தை வலியுறுத்தி போராட்டங்கள் செய்து வருகின்றன. ரஷ்ய ஊடகங்களும் இந்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க பரிந்துரை செய்துள்ளன.

Tags: , ,

Leave a Reply