தமிழகம், ராமேஸ்வரம் மீனவர்கள் 73 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப் பகுதியில் ரோந்துப் பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 73 மீனவர்களைச் கைது செய்துள்ளனர்.
மேலும், 8 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இம் மீனவர்களை இலங்கை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாக மீனவர்கள் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் முழு விவரம் மீன் பிடிக்கச் சென்ற மற்ற மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ராமேஸ்வரம் பகுதிக்கு திரும்பி வந்த பின்னரே தெரியவரும் என ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் தெரிவித்தார்.
















