கிழக்கில் ஜனாவின் திடுக்கிடும் கொலைகள் அம்பலம்.. கூட்டமைப்பின் பதில் என்ன..?

Tna-Jnaதுரை,ஜனா,பிரசன்னா ஆகியோர்களின் கடந்தகால துரோக செயல்களை பற்றி செய்திகள் வந்தன குறிப்பாக, வண பிதா சந்திரா அவர்களின் கொலை செய்யப்பட்ட விபரங்களை வாசித்து அறிந்து கொண்டேன் அதையிட்டு நான் அதிர்ச்சி அடையவில்லை ஏன் என்றால் இதை போல நூற்றுக்கணக்கான கொலைகளை இவர்கள் செய்துள்ளார்கள் இதற்க்கு பல உண்மை சம்பவங்களை உதாரனத்திட்கு உங்களின் கவனத்திற்கு என்னால் எழுத முடியும்.

கோவிந்தன் கருணாகரன் (ஜனா) இவர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் செய்த அராஜகங்கள் அட்டுழியங்கள் கொலைகள் அனைத்தையும் எழுதி தீர்த்து விட முடியாது! ஜனா சொந்த ஊரான செட்டிபாளையத்தில் பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி பார்த்துக்கொண்டிருந்த புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைபரையும் ஜனாவின் தலைமையில் இந்தியன் இராணுவத்தின் உதவியோடு சுற்றி வளைக்கப்பட்டு அனைபரும் கைது செய்யப்பட்டு செட்டிபாளைய வாழை தோப்புக்குள் கொண்டு செல்லபட்டு ஜனாவின் தலைமையில் அனைபரும் அடித்தும் வெட்டியும் கொலை செய்யப்பட்டது மட்டுமல்லாது மனித இறைச்சியை ருசி பார்த்த பெருமையும் இந்த ஜனாவுக்கு உண்டு இதை ஜனவால் மறுக்க முடியுமா??? இதை ஜனா மறந்தாலும் அந்த பிரதேச மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் அத்தோடு அந்த சம்பவத்தில் கொல்ல பட்ட அயல் கிராமமாகிய மாங்க்காட்டை சேர்ந்த அமிதலிங்கம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர்களின் குடும்பம் தான் மறக்குமா? இப்போதும் விதவையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தருமலிங்கத்தின் மனைவி மற்றும் அவரின் பிள்ளைகளுக்கு இப்போது நல்ல மனிதருக்கு வேஷம் போடும் இந்த ஜனவால் என்ன ஆறுதல் கூறமுடியும்?தங்களின் தந்தை ஏன் கொல்லப்பட்டார் என்கின்ற உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தர்மலிங்கத்தின் பிள்ளைகளுக்கு என்ன ஆறுதல் இந்த ஜனவால் கூற முடியும்? இதுமட்டுமா? சொந்த ஊரான செட்டிப்பாளையத்தில் வசித்து வந்த கோபாலன் மற்றும் கடுக்காமுனையை சேர்ந்தவரும் செட்டிபலயத்தில் திருமணம் செய்து செட்டிபாளையத்தினில் வாழ்ந்தவருமாகிய பெரியப்பா என்று அழைக்கப்படுபவர் (அவரின் உண்மையான பெயர் எனக்கு தெரியவில்லை) இவர்கள் இருபரையும் ஜனாவின் சொந்த தம்பியாகிய மாமா என்பவனால் இலங்கை இராணுவத்தின் உதவியோடு வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருபரையும் இரவு நேரத்தில் கைது செய்து செட்டிபாளைய இராணுவ முகாமுக்குள் கொண்டு செல்லபட்டு ஜனாவின் உத்தரவின் படி இருபரும் அடித்து கொலை செய்யபட்டார்கள்

அவர்களோடு கைது செய்ய பட்ட பரமசிவம் (அலைக்ஸ்)என்பவர் பணம் வேண்ட்டி விடுதலை செய்யப்பட்டார் இதில் பாதிகபட்டவர்களுக்கு இந்த ஜனவால் என்ன அறுதல் கூறமுடியும்? இந்த உண்மையை ஜனாவல் மறுக்க முடியுமா? இதை போல் பல உண்மைகள், அத்தோடு இவைகளை எழுதி சரி பிழை என்று நான் விவாதிக்க எழுதவில்லை அனால் இவர்கள் காலத்துக்கு காலம் மக்கள் முன் போடும் வேசத்தைதான் விமர்சிக்கின்றேன் அன்று யாரை தேடி தேடி கொலை செய்தார்களோ இன்று அவர்களுக்காக மாறு வேஷம் போடுகின்றார்கள் பாவம் மக்கள் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதற்கு இந்த ஜனா பெரிய அறிக்கை கூட விட்டார் இந்த பாலச்சந்திரன் அப்போது இந்த ஜனாவின் கைகளில் கிடைத்திருந்தால் இந்த ஜனா என்ன செய்திருப்பார் ????

இந்த கொலைகளுக்கு கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சிகளின் தலைவர்களின் பதில் என்ன? இன்றைய நிலையில் தமிழர்களின் தலைமைகள் கூட்டமைப்பினைத் தவிர வேறு இல்லை என வரிக்கு முழங்கும் மட்டக்களப்பின் கூட்டமைப்பின் பழுத்த அரசில் வாதிகள் உங்கள் பதிலை முன்வைப்பீர்களா? அல்லது இந்தக் கொலையாளிக்கு நீங்களும் உடந்தையா? நீங்கள் மக்களுக்கா? அல்லது இப்படிப்பட்ட கொலைகார அரசியல் வாதிகளுக்கா? விழக்குவீர்களா? அல்லது மக்களை விழுங்குவீர்களா? உங்கள் பதிலுக்காக….

Tags: , , ,

Leave a Reply