நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் அரசாங்கம் இன்றையதினம் தீர்மானம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதற்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமை வகிக்கிறார். இதன் போது எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
















