ரஷ்ய கோடீஸ்வரர் வீட்டினுள் திடீரென நுழைந்த 4 அடி நீளமுள்ள கழுகு. அபூர்வ புகைப்படங்கள்

eagle-housரஷ்யாவில் உள்ள ஒரு மில்லியனர் தன்னுடைய வீட்டில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியை மிகவும் ஆர்வமாக ரசித்து பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு கழுகு அவரது வீட்டினுள் நுழைந்து அவர் பார்த்துக்கொண்டிருந்த டிவி மீது உட்கார்ந்ததால் அந்த நபர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

ரஷ்யாவின் Wessex என்ற பகுதியை சேர்ந்டஹ் 58 வயது Jon Ball என்ற கோடீஸ்வரர் தனது வீட்டில் நேற்று டென்னிஸ் போட்டியை டிவியில் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெரிய கழுகு அவரது வீட்டினுள் நுழைந்தது. 4 அடி நீளமுள்ள இறக்கைகளை கொண்டு பிரமாண்டமாக இருந்த கழுகை முதலில் பார்த்து அதிர்ச்சி அடைந்த Jon Ball, பின்னர் ஒருவாறாக சுதாரித்துக்கொண்டு அதனருகில் சென்றார்.

பின்னர் அந்த கழுகு மிகவும் களைப்பாகவும், பசியாகவும் இருப்பதை அறிந்து அந்த கழுகு உண்பதற்காக பழங்களை கொடுத்தார். பழங்களை கழுகு சாப்பிடாததால், பின்னர் சிக்கன் போன்ற இறைச்சி உணவுப்பொருட்களை கொடுத்தார். அவர் கொடுத்த உணவை சாப்பிட்ட கழுகு சிறிது நேரத்தில் மீண்டும் பறந்து சென்றுவிட்டது. அந்த கழுகு கடலில் ஏற்பட்ட புயலில் சிக்கி, வெகுநேரம் ஓய்வு எடுக்காமல் பறந்துவந்து கடற்கரையின் அருகில் உள்ள Jon Ball வீட்டினுள் நுழைந்திருக்கலாம் என தெரிகிறது. கழுகுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply