மருமகனுடன் ஜாலியாக இருந்த மாமியார் : கர்ப்பமடைந்ததால் தற்கொலை.

Sexual-Abuse9திருப்பூரில் மருமகனால் கர்ப்பமடைந்த மாமியார் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் முத்தூர் மங்கப்பட்டி அருகே உள்ள முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து (57). இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் பழனியம்மாள் (36) என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

இவரின் முதல் மனைவிக்கு பிறந்த சாந்தி என்ற பெண்ணுடைய கணவர் பாலசுப்ரமணியன். இந்நிலையில் பாலசுப்ரமணியனுக்கும் பழனியம்மாளுக்கும் நெருங்கிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நாளடைவில் இவர்களது நெருக்கம் அதிகரித்ததால் பழனியம்மாள் கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும், அவமானம் அடைந்த பழனியம்மாள், வெள்ளக்கோவில் கரூர் சாலையில் கேவிபி நகரில் உள்ள மருமகன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்போது வெள்ளக்கோவில் பொலிசார் இவ்விடயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply