வெற்றிமாறன் படத்தில் நடிப்பதை தனுஷ் தவிர்த்தது ஏன்? கோலிவுட்டில் பரவும் கிசுகிசு

danush2ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களில் இணைந்த வெற்றி ஜோடி வெற்றிமாறன் மற்றும் தனுஷ், மீண்டும் ஒரு படத்தில் கூடியவிரைவில் இணைகிறார் என்ற செய்தி வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில் இந்த படம் கைவிடும் நிலைக்கு வந்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆறு தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்தை அடுத்து தனுஷுக்கு மிகச்சரியான ஒரு திரைக்கதையை தயார் செய்து படப்பிடிப்பை தொடங்க வெற்றி மாறன் முனைந்திருக்கும் வேளையில், தனுஷ் இந்த படத்தில் ஆர்வம் காட்டாமல் இந்தியில் நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். மேலும் வெற்றி மாறனிடம் முதலில் இந்த படத்தை தானே தயாரிப்பதாக உறுதியளித்திருந்த தனுஷ், தற்போது வேறு தயாரிப்பாளரை பாருங்கள், அதன் பின்னர் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறிவருகிறாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிமாறன், வேறு தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் தனுஷ் சொந்தமாக வேறு சில படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வரவே, தனுஷ் தன்னுடைய படத்தில் நடிப்பதில் இருந்து தவிர்க்க முடிவு செய்திருப்பதை வெற்றிமாறன் புரிந்துகொண்டார். இருவருக்கும் இடையே தற்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டு படம் டிராப் ஆகும் நிலையில் உள்ளது. வெற்றிமாறன் இந்த படத்தை சிம்புவை வைத்த் தொடங்கலாம் என கிசுகிசு தற்போது வெளிவந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply