ரஷ்யாவில் இலங்கை உளவாளி அடித்து கொலை : பின்னணியில் பல மர்மங்கள்….!

rusiaநேற்றைய தினம்(11) ரஷ்யாவின் மொஸ்கோ நகரில், இலங்கை தூதரகத்திற்கு வேலைபார்க்கும் நபர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளது. ரஷ்யாவில் உள்ள “றோஸ்டோ ஒன் டோன்” (Rostov-on-Don) என்னும் நகரில் இலங்கை ஒரு கண்காட்சியை நடத்தவுள்ளது. இந்த ஏற்பாடுகளை கவனிக்க இலங்கையில் இருந்து ஒரு நபர் ரஷ்யாவுக்கு அனுப்பபட்டுள்ளார்.

அவர் பெயர் ரணவீர் என்று கூறப்படுகிறது. குறித்த நபர் விமான நிலையம் சென்றடைந்த பின்னர் அவர் ஒரு டாக்ஸ்சி மூலமாக, ஹோட்டல் டொன் பிளாசா (Hotel Don Plaza) என்னும் இடத்திற்கு சென்றுள்ளார்.

இவருடன் மேலும் ஒரு இலங்கையர் சென்றுள்ளார். (அன் நபரும் ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் வேலைபார்க்கும் நபர் தான்). இருவரும் டாக்ஸ்சி ஓட்டுனருடன் தகறாறில் ஈடுபட்டதாகவும், அதனால் டாக்ஸி ஓட்டுனர் ரணவீரை தனது காரால் அடித்துக் கொன்றுவிட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக ரஷய பொலிசார் உறுதிசெய்துள்ளார்கள். ரணவீருடன் வந்த மற்றைய நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் நெஞ்சில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து ரணவீர் ஒளிந்துகொள்ள முற்பட்டவேளையே அவர் மீது காரை ஏற்றி டாக்ஸ்சி ஓட்டுனர் அவரைக் கொன்றுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. குறிப்பிட்ட இச்சம்பவத்தில் 2 டாக்ஸ்சி ஓட்டுனர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்கள் இருவரையும் பல மணிநேரம் கழித்து ரஷ்ய பொலிசார் தற்போது கைதுசெய்துள்ளார்கள் என்றும் ரஷ்ய செய்திச் சேவை அறிவித்துள்ளது. இலங்கை தூதரகத்தில் இருந்து கசியும் சில தகவல்களின் அடிப்படையில், இறந்த ரணவீர் என்னும் சிங்களவரிடம் பெருந்தொகையான அமெரிக்க டாலர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட டாக்ஸ்சி ஓட்டுனர், தனது நண்பரின் உதவியோடு இப்பணத்தை கொள்ளையடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

குறித்த இந்தப் பணம் யாருடையது என்பது அடுத்த கேள்வியாக. இது இலங்கையில் இருந்து கொண்டுசெல்லப்பட்டதா ? இதனை மகிந்தர் அல்லது கோட்டபாய ராஜபக்ஷ இரகசியமாக கொடுத்து ரஷ்யாவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும், இது குறித்த மேட்டர் விரைவில் வெளியாகும். ஏன் எனில் சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளதால் , அன் நாட்டுப் பொலிசார் விரைவில் அறிக்கை சமர்பிப்பார்கள் அல்லவா –

Tags: , ,

Leave a Reply