அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகில் சுமார் 100 மில்லியன் பேருக்கு வழிகாட்டும் பெண் இவர் தான் ! என்ன புரியவில்லையா ? ஆம் ஆப்பிள் ஐபோனில் உள்ள GPS வழிகாட்டியில் உள்ள பெண் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான். அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட கரன் என்னும் இப்பெண் 2004ம் ஆண்டு அமெரிக்க சென்று, அங்குள்ள ஒரு ஸ்டியோவில் சுமார் 50 மணித்தியாலங்களாக தனது குரலை பதிவுசெய்தார். இது ஒரு பரீட்சாத்தமாக தான் இடம்பெற்றது என்று அவர் எண்ணியிருந்தார்.
அவரைப் போல பல நூற்றுக்கணக்கானவர்கள் குரல்கொடுத்து இருந்தார்கள். ஆனால் கரனின் குரலையே ஆப்பிள் நிறுவனம் தேர்ந்தெடுத்து இருந்தது. அமெரிக்கா மயாமியில் இருந்து, தூர இடம் ஒன்றுக்கு காரில் பயணித்த கரனின் நண்பி ஒருவர் ஆப்பிள் ஐபோனில் உள்ள GPS வழிகாட்டியை பாவித்துள்ளார். பல மணி நேரம் அவர் கார் ஓட்டிக்கொண்டு இருந்தபோதுதான், அது தனது நண்பியின் குரல் என்பதனை அவர் கண்டு பிடித்துள்ளார். உடனே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு உங்கள் குரல் தான் ஆப்பிள் ஐபோனில் உள்ளது என்று கூறியுள்ளார்.
இதனால் கரன் இன்ப அதிர்சியடைந்துள்ளார். பல வருடங்களாக சுமார் 100 மில்லியன் மக்கள் ஆப்பிள் ஐபோன் வழிகாட்டியை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் உள்ள குரலுக்கு நான் சொந்தக்காரியா என்று அவர் வியந்துபோனாராம். தற்போது அவரை அவுஸ்திரேலியாவின் அடையாளம் என்று மக்கள் புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள். பெருமிதமாக உள்ளது என்று கரன் மேலும் தெரிவித்துள்ளார்.
















