தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் செல்போனை விழுங்கிவிட்டார். அவருக்கு சர்ஜரி செய்யாமலேயே வாய் வழியே செல்போனை டாக்டர்கள் எடுத்தனர். இந்த அரிய காட்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Klerksdorp என்ற நகரில் உள்ள மருத்துவமனைக்கு ஒருவரை மிகவும் ஆபத்தான நிலையில் அவருடைய உறவினர்கள் கொண்டுவந்து சேர்த்தனர். அந்த நபர் செல்போனை விழுங்கிவிட்டதாகவும், உள்ளே இருந்து செல்போனிங் ரிங் சத்தம் வந்துகொண்டிருப்பதாகவும் கூறினர்.
டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் செல்போன் வயிற்றுக்குள் போகாமல் தொண்டையிலேயே சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர். எனவே சர்ஜரி செய்யாமல் வாய்வழியே அந்த செல்போனை இடுக்கி மூலம் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து சாதனை செய்தனர். இந்த சிகிச்சையின்போது அந்த நபருக்கு சில பற்கள் சேதமடைந்தது.
செல்போனை விழுங்கிய பெயர் மற்றும் விபரங்களை டாக்டர்கள் செய்தியாளர்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டனர். அந்த நபர் எப்படி செல்போனை விழுங்கினார் என்றே தெரியவில்லை என அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ liveleak.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் உள்ள இணையதள உபயோகிப்பாளர்களால் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நமது தேடிப்பார் இணையதள வாசகர்களுக்காக இந்த வீடியோவை இங்கு வழங்கியுள்ளோம்.
















