பத்து ரூபாய் சம்பளத்தில் நடிக்கும் நடிகை. பெரும் பரபரப்பு.

charmi-actress-salaryஆஹா எத்தனை அழகு, லாடம், ஸ்ரீஆஞ்சநேயர், பெளர்ணமி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர். இவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் அடிக்கடி பரபரப்பான செய்திகளை வெளியிடும் வழக்கம் உடையவர்.

சமீபத்தில் ஒரு கையில் பத்து ரூபாய் நோட்டும், மறு கையில் ஐபோனும் கையில் வைத்தபடி போஸ் கொடுத்திருந்த ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, தனது அடுத்த படத்திற்கான சம்பளமா இந்த பத்து ரூபாய்? என்று தனக்கு தானே கேள்வி கேட்டுள்ளார்.

சார்மி தற்போது நடித்து வரும் மந்த்ரா 2 படத்தை விளம்பரப்படுத்தவே இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர்தான் தனக்கு இந்த பத்து ரூபாயை கொடுத்ததாகவும், அவர் எதற்காக இந்த பத்து ரூபாயை கொடுத்தார் என்று தனக்கு புரியவில்லை என்றும் கூறியுள்ள சார்மி, இந்த பத்து ரூபாயை தனது அடுத்த பணத்திற்கான டோக்கன் அட்வான்ஸாக தான் நினைத்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த கருத்துக்கு பலரும் பலவிதமாக கேலியாகவும் கிண்டலாகவும் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். சார்மியின் நடிப்புக்கு பத்து ரூபாயே அதிகம் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply