சுமந்திரன் கூட்டமைப்புக்குள் குழப்பங்களை விளைவிக்கிறார் – சிறீதரன் குற்றச்சாட்டு!

sumi-sriஇலங்கை நாடாளுமன்றத்தில் “துடிப்பாக சிறந்து செயல்படும்” உறுப்பினர்களின் தரவரிசைப்பட்டியல் கடந்த 11.06.2014 அன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

அதில் தமிழ் பேசும், தமிழ் – முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டொப் 10 க்குள் இடம் கிடைக்காவிட்டாலும், சுமந்திரனுக்கு 31ம் சிறீதரனுக்கு 33ம் கிடைத்திருந்தன.

இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நலன் விரும்பியொருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் வினவிய போது,

“அது தானே சுமந்திரனுக்கு 31 வந்திருக்கு. எனக்கு 33. எதை வச்சு கணிச்சாங்கள் எண்டு ஒண்டுமே புரியுதில்ல. இது சுமந்திரன்ட வேல. சுமந்திரன் ஒரு புலனாய்வு அமைப்பொண்ட வச்சிருக்குதெல்லோ.”

நலன்விரும்பி:
என்ன அண்ண சொல்லுறீயள்?

சிறீதரன்:
“இந்த வடக்கு கிழக்கில அரசியல் பொருளாதாரம் அபிவிருத்தி, அது இது எண்டு றிசேர்ஜ் (Research) செய்றதுக்கு புலனாய்வு அமைப்பொண்ட சுமந்திரன் வச்சிருக்குது. இலங்கை புலனாய்வு பிரிவின்ட ஆக்களும் அதுக்குள்ள இருக்கினம். அதின்ட வேல தான் இது. அத வச்சி சுமந்திரன் எங்களுக்குள்ள குழப்பங்கள விளைவிக்க பாக்குது.;” என்று சிறீதரன் குற்றம் தெரிவித்துள்ளார்.

-ஊடறுப்பான்-

தொடர்புடைய செய்தி:

பாராளுமன்றத்தில் மாவையை (139) ஓரம் கட்டிய சுமந்திரனும் (31) சிறீதரனும் (33) !!!
இலங்கை பாராளுமன்றத்தில் ”சிறப்பாகச்செயல்படும்” பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

”பாராளுமன்ற கிங்” – ரவி கருணாநாயக்க!

ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள தரப்படுத்தலின் பிரகாரம், பாராளுமன்றத்தில் ”துடிப்பாக சிறந்து செயல்படும்” உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கே முதலிடம் கிடைத்துள்ளது.

டாப் – 10

தரவரிசைப்பட்டியலில் டாப் – 10 க்குள், தமிழ் பேசும் தமிழ் – முஸ்லிம் பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

தரப்படுத்தலில்,

இரண்டாம் இடத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும்,

மூன்றாம் இடத்தை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் பெற்றுள்ளனர்.

முறையே,

நான்காவது இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும்,

சஜித் பிரேமதாஸ 5ஆம் இடத்திலும்,

புத்திக பத்திரண 6ஆம் இடத்திலும்,

அஜித் பி.பெரேரா 7ஆம் இடத்திலும்,

சுஜீவ சேனசிங்க 8ஆம் இடத்திலும்,

சுனில் ஹந்துனெத்தி 9ஆம் இடத்திலும்,

10ஆவது இடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உள்ளனர்.

தமிழ்- முஸ்லிம் கட்சித்தலைவர்கள்! என்ற அடிப்படையில் நோக்கும் போது,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 40ஆவது இடத்திலும்,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 84ஆவது இடத்திலும்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் 55ஆவது இடத்திலும்,

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா 54ஆவது இடத்திலும்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதின் 68ஆவது இடத்திலும் உள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் 166ஆவது இடத்திலும்,

மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஸ்ணன் 133ஆவது இடத்திலும்,

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் 205ஆவது இடத்திலும்,

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் 168ஆவது இடத்திலும்,

பிரஜைகள் முன்னணி செயலாளர் நாயகம் ஸ்ரீரங்கா 57ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஏனைய தமிழ்- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்கள் பிடித்துள்ள இடங்களும் வருமாறு.

ஏ.எச்.எம்.அஸ்வர் – 16ஆவது இடம்

எம்.ஏ.சுமந்திரன் – 31ஆவது இடம்

எஸ்.சிறீதரன் – 33ஆவது இடம்

சந்திரகுமார் முருகேசு – 39ஆவது இடம்

பாக்கியசெல்வம் அரியனேத்திரன் – 44ஆவது இடம்

ஆர்.யோகராஜன் – 47ஆவது இடம்

ஹுனைஸ் பாருக் – 87ஆவது இடம்

பொன்னம்பலம் செல்வராசா – 92ஆவது இடம்

டி.எம்.சுவாமிநாதன் – 93ஆவது இடம்

மொஹமட் ஹிஸ்புல்லாஹ் – 94ஆவது இடம்

எஸ்.யோகேஸ்வரன் – 103ஆவது இடம்

சுரேஸ் பிரேமச்சந்திரன் – 104ஆவது இடம்

விநாயகமூர்த்தி முரளிதரன் – 106ஆவது இடம்

செல்வம் அடைக்கலநாதன் – 120ஆவது இடம்

ஈ.சரவணபவன் – 123ஆவது இடம்

சிவசக்தி அனந்தன் – 128ஆவது இடம்

அப்பாத்துரை விநாயகமூர்த்தி – 137ஆவது இடம்

சில்வஸ்திரி எலன்டின் – 138ஆவது இடம்

மாவை சேனாதிராஜா – 139ஆவது இடம்

பி.ராஜதுரை – 147ஆவது இடம்

ஹசன் அலி – 171ஆவது இடம்

அப்துல் காதர் – 172ஆவது இடம்

விஜயகலா மகேஸ்வரன் – 179ஆவது இடம்

எம்.எஸ்.தவுபிக் – 191ஆவது இடம்

எம்.எம்.ஹாரிஸ் – 192ஆவது இடம்

ஏ.எச்.எம்.பௌசி – 197ஆவது இடம்

எச்.எம்.ஹலீம் – 198ஆவது இடம்

வினோ நோகராதலிங்கம் – 200ஆவது இடம்

பைசர் முஸ்தபா – 203ஆவது இடம்

பசீர் சேகுதாவூத் – 206ஆவது இடம்

பைசல் காசிம் – 216ஆவது இடம்

ஆறுமுகன் தொண்டமான் – 218ஆவது இடம்

தரப்படுத்தலின் படி இறுதி 225ஆவது இடத்தில் (பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 225) தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்குத்தாவிய பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply