$340,000 ஊழல். ரோமானிய அதிபரின் சகோதரர் அதிரடி கைது. பெரும் பரபரப்பு.

Traian-Basescuரோமானிய அதிபரின் சகோதரர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் ரோமானியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரோமானிய அதிபர் Traian Basescu அவர்களின் உடன்பிறந்த சகோதரர் Mircea Basescu ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்குமாறு ரோமானிய நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Mircea Basescu அவர்கள் தனது சகோதரரின் பெயரை பயன்படுத்தி சுமார் $340,000 அளவிற்கு செய்த மாபெரும் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தனது சகோதரரின் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த Traian Basescu அவர்கள், தனது சகோதரர் என்பதற்காக சட்டம் வளைந்து கொடுக்காது என்றும், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் அதற்குண்டான தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் இந்த வழக்கில் அரசின் தலையீடு நிச்சயமாக இருக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: , , , ,

Leave a Reply