பிரிட்டனில் உள்ள 64 வயது நபர் ஒருவருக்கு 15 மனைவிகளும் 26 குழந்தைகளும் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் உள்ளதால், தனக்கு வேறு ஒரு பெரிய வீடு தேவை என்றும், குடும்பச்செலவிற்கு அரசு உதவி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள Newport, Isle of Wight, என்ற பகுதியை சேர்ந்த 64 வயது Peter Rolfe என்பவர் அடிக்கடி திருமணம் செய்யும் பழக்கம் உடையராக இருந்தார். இவருக்கு மொத்தம் 15 மனைவிகள். இவர்கள் மூலம் இவருக்கு 14 ஆண்குழந்தைகளும் 12 பெண் குழந்தைகளும் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருப்பதுதான் ஆச்சர்யம்.
இவர் வெளியூருக்கு வேலை நிமித்தமாக செல்லும்போதெல்லாம் திரும்பி வரும்போது ஒரு புது மனைவியுடன் தான் வருவாராம். தற்போது எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்கும் Peter Rolfe, அரசும், தொண்டு நிறுவனங்களும் தன்னுடைய குடும்ப செலவிற்கு உதவி செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள சேனல் 5 தொலைக்காட்சி இவரை Benefits Britain: Life On The Dole என்ற நிகழ்ச்சிக்காக பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் தன்னுடைய குடும்பத்திற்கான செலவை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் அரசு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவருடைய பேட்டி ஒளிபரப்பானவுடன் அரசும் சில தொண்டு நிறுவனங்களும் இவருடைய குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. தற்போதுவரை இவருக்கு $850,625 வரை உதவித்தொகை கிடைத்துள்ளதாம். சேனல் 5 தொலைக்காட்சிக்கு இவர் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
















