சிங்கப்பூரில் இருந்து லண்டன் வந்த தமிழர்கள் “மேச் பிக்ஸ்” விளையாட்டு… : ஸ்காட்லன் யாட் பொலிசாரிடம் எவ்வாறு மாட்டினார்கள் ?

shankar-ganeshசிங்கப்பூரில் இருந்து லண்டன் வந்த ஷங்கரன் மற்றும் கனேஷன் ஆகியோர் சில உதைபந்தாட்ட கழகங்களை அணுகி அங்கு விளையாடும் வீரர்களை பணம் கொடுத்து வாங்க முற்பட்டுள்ளார்கள். அட பணம் கொடுத்து வாங்க முற்பட்டுள்ளார்கள் என்றால், தமது சிங்கப்பூருக்கு விளையாட அல்ல! அதாவது சில மேச்சை விளையாடும் போது, நாங்கள் தோற்றுப்போங்கள் என்று சொன்னால் தோற்றுப்போகவேண்டும் என்பதற்காகவே பணத்தை கொடுக்க முற்பட்டுள்ளார்கள். சுருக்கமாக சொன்னப்போனால் “மேச் பிக்ஸ்”.

லண்டனில் உள்ள சில உதைபந்தாட்ட கழகங்களில் உள்ள, வீரர்கள் சிலரை இவர்கள் அணுகி தமக்காக வேலைசெய்யுமாறும், தாம் அதற்காக பெருந்தொகைப் பணத்தை தருவதாகவும் இவர்கள் கூறியுள்ளார்கள். இதில் விம்பிள் டன், ரெட் பிரிஜ், போன்ற உதைபந்தாட்ட கழகங்களும் அடங்குகிறது. இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதனை பிரித்தானிய ஸ்காட்-லான் யாட் பொலிசார் கண்டுபிடித்த விதம் தான் சுவாரசியமானது. இந்த இரண்டு தமிழர்களும் தாம் பெரித திட்டத்தை தீட்டுவதாக நினைத்து, தம்மை எவராலும் கண்டு பிடிக்க முடியாது என்றும் நினைத்து, பெருந்தொகைப் பணத்தை முதலில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு மாற்றியுள்ளார்கள்.

பின்னர் அவர்கள் லண்டன் வந்ததும், அந்த ஐரோப்பிய நாட்டில் உள்ள தமது பணத்தை யூரோவாக அப்படியே லண்டன் எடுத்து வந்துள்ளார்கள். இந்த பணப் பரிமாற்றம் கூட மிகவும் புத்திசாலித்தனமாக தான் நடைபெற்றுள்ளது. இதில் எந்த சொதப்பலும் இல்லை. ஆனால் லண்டனில் உள்ள யூரோக்களை அவர்கள் பவுண்ஸாக மாற்ற முற்பட்டவேளை தான் சிக்கல் ஆரம்பமானது. இவர்கள் தம்மிடம் உள்ள பெருந்தொகையான யூரோக்களை லண்டனில் உள்ள தனியார் பணமாற்று நிலையங்களுக்கு சென்று அங்கே மாற்றியுள்ளார்கள். பல இடங்களுக்கு சென்று இவர்கள் இவ்வாறு பணத்தை மாற்றியுள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு தெரியத விடையம் என்னவென்றால், லண்டனில் பல தனியார் பண மாற்று நிலையங்கள் உள்ளது.

அவை வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும் பொதுவாக அவற்றின் உரிமையாளர் ஒருவராக தான் இருப்பார். ஒரு தனி நபருக்கே சிலவேளைகளில் 10 கடைகள் இருக்கும். இவ்வாறு இவர்கள் சென்று ஒருவர் கடையாக ஏறி இறங்கி தமது பணத்தை மாற்ற ஆரம்பித்தவேளை, இதனை அவதானித்த ஒரு கடையின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவலை வழங்கிவிட்டார். இனி சும்மா இருப்பார்களா ஸ்காட்லன் யாட் பொலிசார் ? இவர்களை அப்படியே பிந்தொடர்ந்து அனைத்து தகவல்களையும் சேகரித்து இறுதியில் கைதுசெய்துவிட்டார்கள்.

இந்த இரண்டு சிங்கப்பூர் வாசிகளில் ஒருவர் இலங்கைத் தமிழர் என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் இலங்கையில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.

Tags: ,

Leave a Reply