நீதிபதி என்ன தான் செய்வார்? – ஜி.ரி.லிங்கநாதனின் கனகச்சித பதில்!

vikky-courtநாடாளுமன்ற கலரியில் அமர்ந்திருப்பதை விடவும், நாடாளுமன்ற உணவக “பெஞ்ஜ்” இல் அமர்ந்திருந்து ஒரு குவளை தேநீரை சுவைத்தபடி, செய்தி சேகரிப்பதில் அலாதி பிரியமும், ரசனையும், நம்பிக்கையும் கொண்டவன் நான்.

நாடாளுமன்ற அமர்வின் போது முட்டி மோதி முறுகிக்கொண்டவர்கள், ஆளும்கட்சி எதிர்கட்சி பாகுபாடு இல்லாமல் நட்பு பாராட்டும் – குரோதங்களை மறந்து மனசு விட்டுப்பேசும் ஒரே இடம், இந்த நாடாளுமன்ற உணவகம் தான்.

SLFP, UNP, JVP, TNA, SLMC இப்படி எழுத்துகளுக்குள் கட்டுண்டு கிடக்காமல், கட்டுடைத்து கட்டுப்பாடில்லாமல் அமைச்சர்கள் உறுப்பினர்கள் கூடிக்குலாவி கலாய்த்திருக்கும் பொழுது, செய்திகளுக்கு தட்டுப்பாடே வருவதில்லை.

சொந்த கட்சியையே நார் நாராய் கிழித்தெடுப்பதையும், சொந்த கட்சிக்காரனையே நோண்டி நுங்கெடுப்பதையும், கட்சி தலைவருக்கு “ஜால்ரா” போட்டவர்கள் அதே தலைவரின் தலையில் தபேலா வாசிப்பதையும் இங்கு தான் பார்க்க முடியும். கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி, குத்தல் நகைச்சுவைக்கும், Better தத்துவங்களுக்கும், Serious matter களுக்கும் பஞ்சமே இருக்காது.

நாடாளுமன்றம் மட்டுமல்ல, இலங்கையிலுள்ள அனைத்து மாகாணசபைகளுக்கும் இந்த புதிய ஜனநாயக பண்பாடு, அரசியல் கலாசாரம் பொருந்தி வருகின்றது. அப்படியென்றால், வடமாகாணசபை மட்டும் இதற்கு விதிவிலக்காகி விட முடியுமா என்ன?

இத்தகைய ஒரு சூழலில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில், வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் கலக்கல் சம்பாசணை!

“யாராச்சும் இருவர் தங்களுக்குள் ஏதாவது பிணக்குகள், பிரச்சினைகள் எண்டு நீதிமன்றத்துக்கு போனா, நீதிபதி என்ன செய்வார்? வழக்க ஒத்தி வைச்சு, ஒத்தி வைச்சு காலத்த இழுத்தடிப்பார். (வீணடிப்பார்)

அதாவது பிரச்சின இல்ல, ஆக ரெண்டு பேரிண்ட பிரச்சின. இப்ப பார்த்தா, ஒட்டுமொத்த தமிழ் மக்களின்ட பிரச்சினையையும் அவரிட்ட பாரம் கொடுத்தீட்டீயள்! நீதிபதியா இருக்கும் போது அவர் என்னத்த செஞ்சாரோ, அத தானே இப்பவும் செய்வார்.”

-ஊடறுப்பான்-

Tags: , ,

Leave a Reply