அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடராக வெளிவந்து கொண்டிருந்த The Homeland என்ற தொடரின் நான்காவது பாகம் தற்போது தயாராக உள்ளது. இந்த தொடரில் நடிப்பதற்கு Life of Pie நடிகர் சூரஜ் சர்மா தேர்வாகியுள்ளார்.
Life of Pie படத்திற்கு பின்னர் Million Dollar Arm, படத்தில் நடித்த சூரஜ் சர்மாவுக்கு தற்போது இந்த தொடரில் முக்கிய வேடம் கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்தியரான சூரஜ் சர்மா, ஹாலிவுட்டில் தற்போது நிலையான ஒரு இடத்தை கைப்பற்றிவிட்டார் என்றே கூறப்படுகிறது.
The Homeland தொடரின் நான்காவது பாகத்தில் சூரஜ் சர்மா பாகிஸ்தானில் உள்ள மெடிக்கல் கல்லூரி மாணவராக நடிக்கின்றார்.இந்த தொடரின் படப்பிடிப்புகள் தென்னாப்பிரிக்கா, இஸ்லாமாபாத் மற்றும் காபூல் போன்ற இடங்களில் நடக்கவுள்ளன.
17 வயதில் Life of Pie படத்தில் நடிக்க வந்த சூரஜ் சர்மா, இன்று The Homeland தொடரில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் மற்றும் த்ரில் கலந்து உருவாகவுள்ள இந்த தொடரின் மூலம் தனது புகழ் அமெரிக்கா முழுவதும் பரவிவிடும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
















