பாலுக்குப் பதில் நான் ‘பீர்’தான் குடிப்பேன்: மது கேட்டு அடம்பிடிக்கும் 2 வயதுக் குழந்தை

dring_child_01சீனாவில் வெறும் இரண்டு வயது குழந்தையே சிறந்த குடிமகனாக உள்ளான். ஆம் குடிமகன் தான். இவன் குடிக்கின்ற மகன். கவனம் இது உங்களுக்கு இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் செய்தியிது.

இரண்டு வயதான இந்த குழந்தையின் பெயர் ஷெங் ஷெங் 10 மாதங்களாக இருந்தபோது சுவைத்து பார்த்த இரண்டாவது குடிபானம் பியர் தான்.

பியர் அல்லது வைன் கேட்டு மறுக்கப்பட்டால் அடம் பிடித்து அழுகின்றான். இவனுக்கு பிடிக்காதது பால் ! இவன் 10 மாதங்களாக இருந்தபோது இவனுடைய வாயில் வெறுமனே ஓரிரு பியர் துளிகளை மட்டுமே விட்டிருக்கின்றார் இச்சிறுவனின் தந்தை.

ஆனால் பின்னர் நாளடைவில் ஷெங் தந்தை குடித்துவிட்டு வைக்கும் கிளாசை யாருக்கும் தெரியாமல் ஒருகை பார்த்துவிடுவானாம் இச்சிறுவன்.

ஆரம்பத்தில் இச்சிறுவன் பியர் குடிப்பதனை ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவே இல்லை என்கிறார் இச்சிறுவனின் உறவுக்கார பெண்மணி ஒருவர்.

Tags: , ,

Leave a Reply