பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு- நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் இது நம்ம ஆளு. இவர்கள் இருவருமே சில வருடங்களுக்கு முன்பு காதலித்து, பின் ஏற்பட்ட சில கசப்பான சம்பவத்தால் பிரிந்தனர்.
தற்போது மீண்டும் தன் பழைய பிரச்சனைகளையெல்லாம் மறந்து இப்படத்தில் நடிக்கின்றனர், இவர்கள் இணைந்து நடித்ததால் தான் சிம்புவின் தற்போதைய காதலியான ஹன்சிகாவை பிரிந்தார் என பல ஊடகங்களில் சொல்லிவந்தனர். ஆனால் இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘சிம்பு- நயன்தாரா வாழ்க்கையை திரும்பி பார்ப்பது போல் தான் படம் வந்துள்ளது, இருவரும் மறுபடியும் காதலர் ஆவர்களா? என்று கேட்டால், அது எனக்கு தெரியாது, நடந்தால் சந்தோஷமே’ என்று தெரிவித்துள்ளார்.
















