பாஹுபாலி படப்பிடிப்பில் அனுஷ்காவுடன் பயங்கர மோதல். தமன்னாவிற்கு ரத்தக்காயம்

tamanna-anushka-clasஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிவரும் பாஹுபாலி என்ற பிரமாண்டமான படத்தில் அனுஷ்காவும், தமன்னாவும் நடிக்கின்றனர். சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இந்த படத்தில் உள்ளே நுழைந்த தமன்னா, தற்போது இயக்குனரின் நெருக்கம் காரணமாக அவருடைய கதாபாத்திரம் விரிவாக்கப்பட்டு, முக்கிய கதாபாத்திரமாக மாறிவிட்டது. இளவரசி வேடத்தில் நடிக்கும் தமன்னாவிற்கு சண்டைக்காட்சிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஹுபாலி படத்தின் ஒரு காட்சியில் தமன்னாவும், அனுஷ்காவில் மோதுவது போன்ற ஒரு காட்சியும் வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே சண்டைக்காட்சிகளில் நடித்து பழக்கப்பட்டவர் என்பதால் மிக எளிதாக தமன்னாவுடன் சண்டை போடுகிறார். ஆனால் இதுவரை சண்டைக்காட்சியில் நடித்திராத தமன்னா, அனுஷ்காவுடன் மோதுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். ஒருசில ஷாட்களில் அவருக்கு ரத்தக்காயமும் ஏற்பட்டது. சண்டைப்பயிற்சி இயக்குனர் தமன்னாவிற்கு சில எளிய சண்டை வகைகளை மட்டும் சொல்லிக்கொடுத்து காட்சிகளை எடுத்து முடித்துள்ளனர்.

ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவும், இளவரசி வேடத்தில் நடிக்கும் தமன்னாவும் மோதும் இந்த சண்டைக்காட்சிதான் படத்தின் ஹைலைட் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். ரூ.150 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் வரும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாததில் வெளிவரும் என தெரிகிறது.

Tags: , ,

Leave a Reply