லண்டனில் உள்ள முஸ்லீம்கள் மகிந்தருக்கு ஆப்புவைக்க தயாராகி வருகிறார்கள்: கசியும் செய்தி !

mus-unoஇலங்கையில் முஸ்லிம்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, லண்டனில் உள்ள முஸ்லீம்கள் தமிழர் பாணியில் மகிந்தருக்கு அலுப்பு கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் எவ்வாறு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்களோ, அதனை அவர்கள் பிரித்தானியாவில் உள்ள அரசில் மட்டத்தில் எடுத்துச் செல்கிறார்கள். இதனூடாக இலங்கை மேல் பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. இதனை முன் உதாரணமாக எடுத்து தற்போது லண்டனில் வசிக்கும் இலங்கை முஸ்லீம்கள், பிரித்தானிய அரசை நாடியுள்ளார்கள். இலங்கையில் அடித்து நொருக்கப்பட்ட முஸ்லீம் பள்ளி வாசல்களின் படம் தொடக்கம், சமீபத்தில் நடந்த கலவரத்தின் அனைத்து படங்களையும் அவர்கள் லண்டனில் உள்ள அரசியல்வாதிகளிடம் காட்டியுள்ளார்கள். தாம் வசிக்கும் தொகுதிகளில் உள்ள எம்.பீகள் ஊடாக இந்த விடையத்தை அவர்கள், பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது. இன்று (03) அன்று மேலும் ஒரு தொகுதி முஸ்லீம்கள் பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்து, இலங்கையில் தம்மீது பாரிய கொலைவெறி தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கவுள்ளார்கள்.

இதனூடாக ராஜதந்திர நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளர்கள். இதுவரை காலமும் தமிழர்கள் மட்டுமே இலங்கையில் அடக்கு முறை நடக்கிறது என்று தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழர்களுக்கு நடந்த விடையமே தமக்கும் நடக்கிறது என்று முஸ்லீம்களும் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். புத்த மதத்தவர்கள் என்றால், மிகவும் சாதுவானவர்கள் ஆக இருப்பார்களே …. ஆனால் இலங்கையில் உள்ளவர்கள் அப்படி இல்லை என்று பிரித்தானிய எம்.பீகள் சொல்லும் அளவு இப்பிரச்சனை தற்போது பூதாகரமாகியுள்ளது. இங்கே ஒரு பிழை மட்டும் தான் இருக்கிறது. இன்னும் சில முஸ்லீம்கள், இலங்கை கொடியை பிடித்தவாறு போராடுகிறார்கள்.

இதனை தான் இவர்கள் மாற்றவேண்டும். இலங்கை முஸ்லீம்கள் ஒரு தனித்துவமான இனம். அவர்களுக்கு என்று ஒரு மொழி கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. எனவே அவர்களும் ஒரு தேசிய இனம். எனவே அவர்கள தமக்கு என்று ஒரு தேசிய கொடியை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அதனைப் பிடித்து தமது போராட்டத்தை முன்னேடுப்பதே அவர்கள் உரிமைகளை வென்றெடுக்க ஏதுவாக அமையும்.

Tags: , ,

Leave a Reply