இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை அமெரிக்க விசேட பிரிவு முடக்கலாம் !

gotabaja-internetஇலங்கையில் கோட்டபாயவின் அமைச்சின் கீழ் இயங்கிவரும் பாதுகாப்பு இணையத்தை அமெரிக்கா முடக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. முடக்குவது என்பதன் பொருள் என்னவென்றால் தேடு பொறிகளில் மற்றும் சில இனரர் நெட் வழங்குனர்களில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையம் வேலைசெய்யாமல் போகலாம் என்பதே பொருள் ஆகும். இது எவ்வாறு நடக்கும் என்ன சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதனை பார்ப்போம். சமீபத்தில் ஐரோப்பிய நீதிமன்றில் ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. அது என்னவென்றால் “மறப்போம்” என்ற பெயர் குறியீட்டில் இது இருக்கிறது. ஒரு தனி நபர் குறித்த செய்தி ஒன்று அவரை பாதிக்கும் விதத்தில் இருந்தால் கூகுள் போனற தேடுபொறிகள் அதனை அகற்ற வேண்டும் என்பதே ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பாக உள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் குறித்து எவரும் செய்தியை வெளியிட முடியாது. அவ்வாறு வெளியிடப்படும் செய்தி அல்லது தகவலை முறைப்பாடு செய்யும் பட்சத்தில் குறித்த தேடுபொறி அகற்றவேண்டும். இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையமானது, பல தமிழர்களுக்கு எதிராக செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டு வருகிறது. இவற்றில் பல செய்திகள் ஆதாரமற்றவையாக உள்ளது. எனவே இது தொடர்பாக கூகுள் போன்ற நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்தால், அவர்கள் அச் செய்தி தேடுபொறிகளில் வராதவாறு அப்புறப்படுத்துகிறார்கள். அத்தோடு சம்பந்தப்பட்ட இணையத்திற்கு தகவலையும் அனுப்புகிறார்கள்.

ஆனால் இலங்கை அரசு, இதற்கு கட்டுப்படாது தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. இதனால் இக்கட்டான சூழ் நிலை உருவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் பல தமிழர்கள், இணைந்து கூகுள் போன்ற நிறுவனங்களிடம் தொடர்சியாக இக்கோரிக்கையை முன்வைத்தால், பல தோடு பொறிகள் இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்தை தமது தேடுபொறிகளில் தடைசெய்யும். இதில் இன்ரர் நெட் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கூகுள் நிறுவனம் இவ்வாறு ஒரு காரியத்தை செய்தால், அது இலங்கை அரசுக்கு விழும் பாரிய அடியாக இருக்கும். இதனையே தற்போது உலகளாவிய ரீதியில் உள்ள பல தமிழர்கள் செய்ய முற்பட்டுள்ளார்கள். கூகுள், யாகூ போன்ற தேடுபொறிகள் இலங்கை பாதுகாப்பு இணையத்தை தடைசெய்தால், அதனை பலரால் பார்க முடியாமல் போகும் நிலை தோன்றும். இந்த ஐரோப்பிய சட்டத்தை தமிழர்கள் நன்றாக பாவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

Tags: , ,

Leave a Reply