பாகிஸ்தானில் இறந்த 47 ஆண்டுகள் கழித்து ஜின்னாவின் தங்கைக்கு தண்ணீர் பில்

ali-jinnaஇந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக காரணமாக இருந்தவர், முகம்மது அலி ஜின்னா.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்த இவரது தங்கை பாத்திமா ஜின்னா இறந்து 47 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில், கராச்சி நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் துறை சமீபத்தில் அவருக்கு ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்து 774 குடிநீர் வரி பாக்கி கட்ட வேண்டும் என்று பில் அனுப்பியுள்ளது.

இன்னும் 10 நாட்களுக்குள் மேற்படி தொகையினை கட்டத் தவறினால், குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply